கோவை ரயிலில் கஞ்சா கிரீம் கடத்தல் – கேரள வாலிபர் கைது..!

கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் நேற்று ரயில் நிலையம் ரோட்டில் உள்ள ஒரு தியேட்டர் அருகே சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 39 கிராம் கஞ்சா கிரீம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . இதையடுத்து இவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் இவர் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைசேர்ந்த அருண் (வயது 31) என்பதும்,இதை இமாசாலய பிரதேசத்திலிருந்து கோவைக்கு கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இவரிடமிருந்து கஞ்சா கிரிமும், செல்போனும் , 2 ரெயில் டிக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது..