கோவை மாவட்டம் காரமடை ,நகராட்சி அலுவலகம் காரமடை சப் இன்ஸ்பெக்டர் சுல்தான் இப்ராகிம் நேற்று மாலை வாகன சோதனை நடத்தினார்.அப்போது ஸ்கூட்டி ஓட்டி வந்த ஒரு பெண்ணை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அவரிடம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதேபோல பைக்கில் வந்த இரு வாலிபர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இவர்களிடமிருந்து மொத்தம் 3 கிலோ கஞ்சாவும் ,கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டியும், பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் இவர்கள் சேலம்மாட்டுப்பட்டிகானூர் சிவக்குமார் மனைவி சாந்தி ( வயது 35) ஆந்திராவைச் சேர்ந்த கோசட்டி மரினியா (வயது) 28 சதீஷ்ககாரா ( வயது 28) என்பது தெரியவந்தது. இவர்கள் இந்த கஞ்சாவை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் இருந்து வாங்கி வந்ததாக தெரியவந்தது.