கோவைக்கு ஆம்னி பஸ்சில் 400 கிலோ குட்கா கடத்தல் : 2 பேர் கைது – பஸ் பறிமுதல்..!

கோவை மாநகர பகுதியில் போதைப்பொருட்கள் கடத்தலை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள் .இந்த நிலையில் வெளியூர்களில் இருந்து கோவைக்கு வரும் ஆம்னி பஸ் களில் புகையிலை பொருட்கள் ( குட்கா ) கடத்தப்பட்டு வருவதாக போலீஸ் கமிஷனர்சரவண சுந்தருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் துணை கமிஷனர் சரவணகுமார் மேற்பார்வையில் தனிப்படையினர் ஆம்னி பஸ்களில் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.அப்போது பெங்களூரில் இருந்து கோவைக்கு வந்த ஆம்னி பஸ்சை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் . அந்த பஸ்சில் பார்சல் இருக்கும் இடத்தில் இருந்த ஒவ்வொரு பெட்டிகளையும் போலீசார்சல்லடை போட்டு சோதனை மேற்கொண்டனர். இதில் அங்கு பெட்டி பெட்டியாக புகையிலை பொருட்கள் (குட்கா ) பதுக்கி வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டதுஉடனே போலீசார் அங்கிருந்த 400 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் கோவை கரும்பு கடையை சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவர் புகையிலை பொருட்களை ஆம்னி பஸ்சில் பார்சல் புக்கிங் செய்து கடத்தி வந்ததும், அதற்கு ஆம்னி பஸ் நிறுவன மேலாளர் நாகராஜ் உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது .உடனே ஜாகிர் உசேன், மேலாளர் நாகராஜ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர் .குட்காவும் -ஆம்னி பஸ்சும் பறிமுதல் செய்யப்பட்டது..