கேரளாவுக்கு ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தல்: ஓட்டுனர் உள்பட 2 பேர் கைது-ஒருவர் தலைமறைவு..!

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல்துறை தமிழகம் முழுவதிலும் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதனை தொடர்ந்து பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் துறையினர் கோவை சிங்காநல்லூர் அருகே வாகன சோதனை செய்து கொண்டு இருந்த பொழுது அவ்வழியாக வந்த ஆட்டோவை சோதனை செய்த போது அதில் தமிழக அரசால் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தலா 50 கிலோ எடை கொண்ட 21 வெள்ளை நிற மூட்டைகள் என மொத்தம் 1,050 கிலோ ரேஷன் அரிசிகளை கைப்பற்றி வாகனத்தை ஓட்டி வந்த மதுக்கரை குமிட்டிபதி வல்லரசு என்பவரையும் அவருக்கு உதவியாக வந்த நல்ல மணி என்பவரையும் விசாரணை செய்த போது சிங்காநல்லூர் நெசவாளர் காலனி, நீலி கோனம்பாளையம் பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கேரளாவின் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்று வரும்படி கொழிஞ்சாம்பாறை சேர்ந்த காஜா என்பவர் தங்களை ஆட்டோவை கொடுத்து அனுப்பி வைத்ததாகவும் கூறியதன் பேரில் வல்லரசு மற்றும் நல்லமணி ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் வாகனம் மற்றும் அரிசியின் உரிமையாளரான கேரள மாநிலம் கொழிஞ்சாம் பாறையை சேர்ந்த காஜா என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.