கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்பவர்கள் பிடிக்கப்பட்டு உரிய விசாரணை நடத்தப்படுகிறது. சரியான காரணங்களை கூறினால் பணம் திரும்ப ஒப்படைக்கப்படுகிறது. கோவை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை ரூ.3 கோடியே 57 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதில் பணம்,மது பாட்டில்கள், கஞ்சா, தங்கம், பரிசு பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் அடங்கும் .நேற்று முன்தினம் ரூ. 9 லட்சத்து 23 ஆயிரத்து 484 பறிமுதல் செய்யப்பட்டது. தொண்டாமுத்தூர் தொகுதியில் 634 சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு மட்டும் ரூ 2 லட்சத்து 50 ஆயிரம் இருக்கும். மேலும் அரை கிலோ கஞ்சா உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் ரூ.1 கோடியே 59 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் திரும்ப ஒப்டைக்கப்பட்டுள்ளன. இந்த தகவலை கோவை நாடாளுமன்ற தேர்தல் பிரிவு அலுவலகம் தெரிவித்துள்ளது..
கோவை நாடாளுமன்ற தொகுதியில் இதுவரை ரூ.3.50 கோடி பறிமுதல் – தேர்தல் பறக்கும் படை அதிரடி.!!
