குன்றத்தூர் : 70 வயது முதியவரை கொலை செய்த இளைய மகன் சிசிடிவி காட்சி மூலம் சிக்கினான். இது பற்றிய விவரம் வருமாறு குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் பூந் தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கதுரை வயது 70 இவருக்கு டென்னிஸ் ராஜ் என்ற மூத்த மகனும் ராபின் என்கிற ராபின்சன் வயது 45 என்ற இளைய மகனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு மூத்த மகன் டென்னிஸ் ராஜ் இறந்துவிட்டார். முதியவர் தங்கதுரை குன்றத்தூர் ஸ்ரீபெரும்புதூர் சாலையில் நந்தம்பாக்கம் அஞ்சுகம் நகரில் நர்சரி செடிகள் விற்கும் கடையை நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 31ஆம் தேதி தங்க துரை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கையில் அணிந்திருந்த தங்க மோதிரமும் திருடு போயிருந்தது. இந்த கொலை குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் இந்த கொலை பற்றி எந்தவித துப்பும் கிடைக்கவில்லை. தாம்பரம் போலீஸ் கமிஷனர் ஆக்சன் கிங் முனைவர் அ அமல்ராஜ் உத்தரவின் பேரில் அந்தப் பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் தங்கதுரையின் இளைய மகன் ராபின் என்கிற ராபின் சன் நள்ளிரவு நேரத்தில் நர்சரி கார்டனுக்கு வந்து சென்றது. டிவியில் கிடைத்தது. அதன் பேரில் ராபின் சனை குன்றத்தூர் போலீசார் கொலையாளிக்கு பிரியாணி வாங்கி கொடுத்து இந்தக் கொலையை ஏன் செய்தாய் உண்மையை சொல்லிவிடு என அன்பாக கேட்டனர். அவனும் எனது தந்தையை ஆத்திரத்தில் கொலை செய்து விட்டேன் .எனது அண்ணன் டென்னிஸ் ராஜிக்கு சொந்தமாக வீட்டுமனை உள்ளது. அந்த வீட்டு மனையை விற்பதற்கு நான் முயற்சி செய்தேன். அந்த இடத்தை விற்க எனது தந்தை தங்கதுரை அனுமதி வழங்கவில்லை. இதனால் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தேன் .நள்ளிரவு நேரத்தில் நர்சரி கார்டனுக்கு சென்று மறைந்திருந்தேன். பின்னர் நள்ளிரவு நேரத்தில் எனது தந்தை தங்கதுரை அயர்ந்து தூங்கிவிட்டார் என பார்த்துவிட்டேன் அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து தலையில் பலமாக அடித்து கொலை செய்தேன். பின்பு வீட்டிற்கு வந்து எதுவும் நடந்தது போல் தெரியாமல் படுத்து விட்டேன். அதிகாலை 4 மணிக்கு ஈஸ்டர் பண்டிகையில் சிறப்பு ஆராதனை பங்கேற்று வீடியோ எடுத்துக் கொண்டேன். இந்த வீடியோவால் நான் உத்தமன் போல் காண்பித்துக் கொண்டேன் .தற்போது வசமாக போலீசாரிடம் சிக்கிக் கொண்டேன். அந்தப் பகுதி மக்கள் கொலைகாரனை பார்த்துவிட்டு அடப்பாவி நல்லவன் போல் நடித்து ஏமாற்றி விட்டாயே ஆண்டவர் உனக்கு தக்க தண்டனை கொடுக்கட்டும் என மண்ணை வாரி தூற்றினர்..