கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் இருந்து சிறப்பு உதவி ஆய்வாளரின் பைக் திருட்டு..!

கோவை செல்வபுரம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக உள்ள செல்வக்குமார் தனது வாகனத்தை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார்.

காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் குடியருப்பு முன்பாக நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

சம்பவம் குறித்து உதவி ஆய்வாளர் செல்வகுமார் அளித்த புகாரின் பேரில் பந்தய சாலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை.

காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள CCTV காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது, இரு சக்கர வாகனத்தை திருடி செல்வது பதிவாகியுள்ளது. இருசக்கர வாகனத்தை திருடி சென்ற நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.