ஒரு கோடி மதிப்புள்ள நிலம் மோசடி செய்தவர் கைது..!

ஆவடி காவல் ஆணையாளர் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மத்திய குற்ற பிரிவில் 5.11.2019ம் ஆண்டு பிரேமா வயது 67.கணவர் பெயர் மோகன். புகழேந்தி தெரு முகப்பேர் கிழக்கு சென்னை என்பவர் கொடுத்த புகார் மனு சம்பந்தமாக நில பிரச்சனை தீர்வு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்படி வழக்கானது என்னை வரம்பு காரணமாக ஆவடி காவல் ஆணையரகம் மத்திய குற்ற பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது.1.பிரேமா கணவர் பெயர் மோகன்2. மாலா. கணவர் பெயர் வாசுதேவன்.3. குணபூஷணம் கணவர் பெயர் கோபால். ஆகியோர் கொடுத்த புகார் மனுவில் பிரேமாவுடன் பிறந்தவர்கள் 8 நபர்கள்.4.மாசிலாமணி தகப்பனார் பெயர் சம்பந்தம்.5. சரவணன் தகப்பனார் பெயர் சம்பந்தம்.6. விஜயலட்சுமி தகப்பனார் பெயர் சம்ப ந்தம்.7.கோடீஸ்வரன் (லேட்) தகப்பனார் பெயர் சம்மந்தம்8. லோகநாயகி தகப்பனார் பெயர் சம்பந்தம்.9. ரமா பிரபா தகப்பனார் பெயர்விஜயலட்சுமி.10. சசிகுமார் தகப்பனார் பெயர் விஜயலட்சுமி.11. பிரவீனா தகப்பனார் பெயர் சரவணன் ஆகியவர்களுக்கு பிரேமாவின் தாயார் சாரதாம்பாள் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா வில் உள்ள இடம் 24 ஏக்கர் 66 சென்ட் கொண்ட இடத்தை பாகப்பிரிவினை செய்து செட்டில்மெண்ட் செய்து கொடுத்துள்ளார்.திவாகர் தகப்பனார் பெயர் சரவணன் என்பவன் தாய் இழ ந்த பிள்ளை என்பதால் சாரதா ம்மாளுடன் வசித்து வந்தான். அப்பொழுது திவாகர் 29.6.2015ல் மனுதாரர்களுக்கு கொடுத்த செட்டில்மெண்ட் சொத்தினை மனுதாரர்களின் கையெழுத்தை போலியாக போட்டு ரத்து செய்து12.7.2018ம் ஆண்டு திவாகர் பெயருக்கு செட்டில்மெண்ட் செய்துள்ளார். இதை தெரிந்த மனு தா ர ர்கள் வழக்கு தொடர்ந்து மனுதாரர்களுக்கு சாதகமாக தீர்ப்பு பெற்று பொன்னேரி சார்பதிவாளர் அலுவலகம் சென்று மேற்படி தீர்ப்பின் நகலை கொடுத்து வில்லங்க சான்று போட்டுப் பார்த்த பொழுது திவாகர் மேற்படி சொத்துயினை ஆதி கேசவலு ரெட்டி தகப்பனார் பெயர் தசரத ராமி ரெட்டி என்பவருக்கு கிரயம் செய்து கொடுத்து மனுதாரர்களை ஏமாற்றி உள்ளான். இதன் மதிப்பு ரூபாய் ஒரு கோடி ஆகும்.இது சம்பந்தமான புகாரின் மீது நில பிரச்சினை தீர்வு பிரிவு இன்ஸ்பெக்டர் வள்ளி தீவிர விசாரணை மேற்கொண்டார். ஆவடி காவல் ஆணையாளர் கே. சங்கர் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர் பெருமாள் ஆகியோரின் உத்தரவின் பேரில் போது இன்ஸ்பெக்டர் தலைமையில் தலை மறைவாக இருந்த கேடி திவாகர் வயது 33 தகப்பனார் பெயர் சரவணன்.4 வது மாடி g2 பிளாக் kg சிக்னேச்சர் சிட்டி மதுரவாயில் சென்னை என்பவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.