கோவை ஆனைக்கட்டி வனப்பகுதியில் புள்ளிமான் வேட்டை- 5 பேர் மீது வனத்துறையினர் வழக்கு..!

கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆனைகட்டி மத்திய பகுதியை ஒட்டியுள்ள ஆர்நாட்காடு மலைகிராமத்தில் ஒரு சிலர் வனத்துறைக்கு எதிராக தவறான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக ரகசிய தகவல் வனச்சரக அலுவலருக்கு தெரிய வருகிறது அதன் படி வனக்காவலர்களுடன் அப்பகுதியில் தனித்தனியாக நோட்டமிட்டனர், அங்கு உள்ள இடங்களை சுற்றிப் பார்த்ததில் ஆர்நாட்காடு கிராமத்தை ஒட்டி வனப்பகுதி அருகே உள்ள தனியார் நிலத்தில் கிட்டன் மகன் பழனிச்சாமி(வ55),நாராயண
சாமி மகன் ராமகிருஷ்ணன்(வ55) இருவரும் காட்டில் சுருக்கு கம்பியை பயன்படுத்தி பெண் புள்ளிமான் ஒன்றை வேட்டையாடி உள்ளனர் என்பது தெரியவந்தது.இதை அடுத்து இருவரையும் பிடித்து விசாரித்ததில், வீட்டின் அருகே உள்ள மறைவான பள்ளத்தில் வைத்து அதனை புள்ளி மானை தோலுரித்து, பழனிச்சாமி என்பவர் வீட்டில் பயன்படுத்தும் வெட்டுக்கத்தி மூலம் இறந்த மானை வெட்டி இருவரும் கூறு போட்டு உள்ளார்.மேலும் புள்ளிமான் பிற உறுப்புகளை எங்கே என கேட்ட வனக்காவலர்கள், இருவரும் தலா 2 கிலோ புள்ளிமான் கறியாக தங்களது வீட்டிற்கு சமைப்பதற்காக எடுத்து சென்றது தெரியவந்தது, மீதமுள்ள சுமார் 10 கிலோ புள்ளிமான் கறியை ராமகிருஷ்ணன் நண்பரான தடாகம் பகுதியை சேர்ந்த ரங்கநாதன் மகன் மாதேஷ் மணிகண்டன் (வ23) ,வெங்கடேஷ் மகன் குரு ஷியாம் (வ23) , ஈஸ்வரன் மகன் முருகேஷ்(வ33) மூன்று பேருக்கு 4000 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது தெரியவந்தது,அவர்களிடம் இருந்த மான் கறியை பறிமுதல் செய்து ஐந்து பேர் மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் ,மேலும் இது போன்று வன விலங்குகளை வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து பிற உயிரினங்களை வேட்டையாடி உள்ளார்களா என வன அலுவலர் முன் விசாரணை நடத்தி வருகின்றனர்,மேலும் தடை செய்யப்பட்ட வனப்பகுதியில் அனுமதியில்லாமல் பொதுமக்கள் யாரும் செல்லக்கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை செய்தனர்