போலீசை மிரட்டிய இலங்கை தமிழர் கைது..!

 ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் அமைந்துள்ளது. பவானிசாகர் போலீசார் இந்த முகாமிற்கு ரோந்து செல்வது வழக்கம்.  வழக்கம்போல் பவானிசாகர் போலீசார் முகாமில் ரோந்து பணி மேற்கொண்டனர். முகாமில் உள்ள பொதுக்கழிப்பிடம் அருகே ஒரு வாலிபர் மது அருந்திக் கொண்டிருந்ததை கண்ட போலீசார் பொது இடத்தில் ஏன் மது அருந்துகிறாய் நீ யார் என போலீசார் விசாரித்தபோது அந்த நபர் போலீசாரை நீங்கள் யார் என்னை விசாரிப்பதற்கு என மிரட்டியதோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளான். போலீசார் அவனை பிடித்து விசாரித்த போது இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த கமல்ராஜ் (22) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் கமல்ராஜ் மீது வழக்கு பதிந்து சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் சிறையில் அடைத்தனர்..