திருப்பூரில் மாநில அளவிலான யோகாசன போட்டி நடைபெற்றது. இப்போட்டி தமிழகத்தில் இருந்து பல்வேறு யோகாசன பயிற்சி மையங்களில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஸ்ட்டேட் லெவல் ஓபன் யோகாசன போட்டியில் ஜூனியர், சூப்பர் ஜூனியர் என இரு பிரிவுகளிலும் நானூறுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற யோகசன போட்டியில் ஒட்டு மொத்த சம்பியன்ஷிப் பட்டத்தை யுனிக் யோகாலையம் மாணவர்கள்,மாணவிகள் பெற்று அசத்தினர் .
2024 நேஷனல் யோகா அசோசியேஷன் ஆஃப் இந்தியா , யோகா பெடரேஷன் ஆஃப் ஆசியா ஒருங்கிணைந்து நடத்திய யோகாசனா விழா இரண்டு தினங்களாக நடந்தது. இதில் எளிய முறையில் தியானம், மூச்சு பயிற்சி யோகாசனம் செய்யும் வழிகளை கற்ப்பித்தனர், தொடர்ந்து நடந்த பல கட்ட போட்டிகளில் சென்னை, திருச்சி, மதுரை, விருதுநகர், சேலம்,கோவை என பல மாவட்ட யோகாசன பயிற்சி மைய குழந்தைகள் போட்டிகளில் பங்கேற்று பரிசு மற்றும் சான்றிதழ் பெற்றனர். இதில் பல்வேறு போட்டிகளில் யுனிக் யோகாலையம் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்று பரிசுகள் சான்றிதழ்கள் பெற்றனர் . இதனிடையே ஓவர் ஆல் சாம்பியன் பட்டத்தையும் யுனிக் யோகாலையம் மாணவர்கள், மாணவிகள் வென்று சாதனை படைத்தனர். இதனை தொடர்ந்து பெற்றோர்கள் உற்சாகம் அடைந்தனர்..