கோவை : மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்கள் சுஜித் மைட்டி ( வயது 19) சுதீப் மைட்டி ( வயது 19) இவர்களும் இரட்டை சகோதரர்கள். கோவை ராஜவீதியில் உள்ள ஒரு ஓட்டல் அறையில் தங்கி இருந்து நகைத் தொழில் செய்து வருகிறார்கள். நேற்று சுதீப் நைட்டி வெளியே சென்றிருந்தபோது சுஜித் மைட்டி ஆர் எஸ் புரம் தியாகி குமரன் வீதியில் தான் வேலை பார்த்து வந்த நகை பட்டறை ஜன்னலில் நைலான் கயிற்றை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இவரது தாயார் இதய நோயால் அவதிப்பட்டு வருகிறார்.இதனால் மனம் உடைந்த சுஜித் மைட்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இது குறித்து அவரது தம்பி சுதீப் மைட்டி ஆர் .எஸ். புரம். போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை நகை பட்டறையில் வடமாநில வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை..
