கோவை குண்டு வெடிப்பு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி பேரணிக்கு தடை விதிக்க கோரி போலீஸ் கமிஷனரிடம் எஸ்டிபிஐ மனு..!

கோவை : எஸ். டி .பி . ஐ கட்சியின் கோவை மாவட்ட அமைப்பு செயலாளர் இப்ராஹிம் பாதுஷா தலைமையில் அந்த கட்சி நிர்வாகிகள் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தனர். பின்னர் அவர்கள் கமிஷனர் சரவண சுந்தரை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர் .அதில் தொழில் நகரமான கோவை அமைதி பூங்காவாக இருந்து வருகிறது. ஆனால் சிறுபான்மையினர் மீது வெறுப்பை தூண்டு வகையில் ஆர்.எஸ். புரத்தில் நாளை ( வெள்ளிக்கிழமை) இந்து அமைப்புகள் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி மற்றும் பேரணியை நடத்த உள்ளன. எனவே இந்த நிகழ்ச்சி மற்றும் பேரணிக்கு அனுமதி அளிக்க கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.