கோவை அருகே உள்ள சுண்டக்காமுத்தூர், காசிநாத் கார்டனை சேர்ந்தவர் எஸ்.கே. பால்சாமி .இவரது மனைவி பாக்கியலட்சுமி (வயது 70) சுகாதாரத் துறையில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் நேற்று ஆர் .எஸ். புரம். டி.பி .ரோட்டில் உள்ள ஒரு செருப்பு கடை முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் தன்னை போலீஸ் அதிகாரி என்று கூறி இப்படி நகை அணிய வேண்டாம். யாராவது கொள்ளையடித்து விடுவார்கள் என்று கூறி நகையை கழற்ற சொன்னார். அதை பேப்பரில் பார்சசல் செய்து பாக்கியலட்சுமி வைத்திருந்த பைக்குள் வைப்பது போல நடித்து திருடிவிட்டார். பிறகு அந்த ஆசாமி அங்கிருந்து நைசாக ஒடிவிட்டார். பாக்கியலட்சுமி பையை திறந்து பார்த்தபோது 5 பவுன் செயின், 4 பவுன் வளையல்களை காணவில்லை. அந்த ஆசாமி திருடிக்கொண்டு நைசாக ஓடிவிட்டார்.இதுகுறித்து மூதாட்டி பாக்கியலட்சுமி ஆர் ,எஸ் .புரம் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் பிரபு வழக்கு பதிவு செய்து அந்த ஆசாமியைதேடி வருகிறார்.