உதவி செய்வது போல நடித்து பெண்ணிடம் நகை, பணம் திருட்டு – மற்றொரு பெண்ணுக்கு போலீசார் வலைவீச்சு..!

கோவை போத்தனூர் செட்டிபாளையம் ரோட்டை சேர்ந்தவர் காசி. இவரது மனைவி சங்கீதா (வயது 30) இவர் நேற்று மொரப்பூரிலிருந்து கோவைக்கு ரயிலில் வந்தார் .அவருடன் ஒரு பெண்ணும் பயணம் செய்தார்.சங்கீதா உடன் நன்றாக பேசிக் கொண்டிருந்தார். கோவை ரயில் நிலையம் வந்ததும் இறக்குவதற்கு தயாரானார். அப்போது அவருடன் வந்த அந்த பெண் நான் ரயில் நிலையத்துக்கு வெளியே வரை உங்கள் பையை தூக்கி வருகிறேன்.நீங்கள் சிரமப்பட வேண்டாம் என்று கூறினாராம். இதற்கு சங்கீதா சம்மதம் தெரிவித்து ஒரு பையை அந்த பெண்ணிடம் கொடுத்தார். ரயில் நிலையத்துக்கு வெளியே வந்ததும் சங்கீதாவிடம் பையை கொடுத்து விட்டு நைசாக சென்றுவிட்டார். அந்தப் பையை திறந்து பார்த்த போது அதிலிருந்த பணம் ரூ.35 ஆயிரம், அரை பவுன் கம்மல் ஆகியவற்றை காணவில்லை. பிளாட்பாரத்தில் இருந்து வெளியே நடந்து வரும் வழியில் பைக்குள் கையை விட்டு அந்த நகைகளை திருடிவிட்டு தலைமறைவாகிவிட்டார். இது குறித்து சங்கீதா ரேஸ் கோர்ஸ் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பெண்ணை தேடி வருகிறார்கள்.