கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி, ஜங்கமா நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் மனோகரன். அவரது மகன் ரேவந்த் கிருஷ்ணா ( வயது 27) தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று தனது காரை கோவை ஆவராம்பாளாயம் ரோட்டில் உள்ள பெண்கள் கல்லூரி முன் நிறுத்திவிட்டு அங்குள்ள பேக்கிரிக்கு டீ சாப்பிட சென்றார் .திரும்பி வந்து பார்த்தபோது அவரது காரின் இடதுபுற கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே பையில் வைத்திருந்த ரூ.50 ஆயித்தை காணவில்லை.யாரோ பையுடன் திருடி சென்று விட்டனர். இது குறித்து ரேவந்த் கிருஷ்ணா காட்டூர் போலீசில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.