குட்கா சோதனை நடத்துவது போல் நடித்து மளிகை கடையில் பணம் திருட்டு – மர்ம நபர்கள் கைவரிசை..!

கோவை கணபதி,ராஜீவ் காந்தி ரோட்டை சேர்ந்தவர் பொன்ராஜ் ( வயது 55) கடந்த 15 ஆண்டுகளாக) மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம் இவரது மனைவியை கடையில் வைத்து விட்டு பொன்ராஜ் வீட்டுக்கு சாப்பிட சென்று விட்டார். அப்போது தன்னை குட்கா தடுப்பு பிரிவு அதிகாரி என்றும் , கடையில் சோதனை செய்ய வந்திருப்பதாக அவரது மனைவிடம் கூறினார். கடைக்குள் புகுந்து சோதனை செய்வது போல நடித்து கல்லா பெட்டியில் இருந்த ரு. 8ஆயிரத்தை நைசாக திருடி சென்று விட்டார். பொன்ராஜ் அரை மணி நேரம் கழித்து வந்து பார்த்தபோது கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை காணவில்லை. அவரது மனைவியிடம் கேட்டபோது ஒரு அதிகாரி சற்று முன் குட்கா சோதனை செய்ய வந்ததாக ஒருவர் கூறினார். இதுகுறித்து பொன்ராஜ் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த ஆசாமியை தேடி வருகிறார்கள்..