கோவையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை – போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை..!!!

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கு கட்டிடத்தில் மாதாந்திர குற்றத்தடுப்பு கூட்டம் நடந்தது.இதில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்.போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அபராதம் விதிக்க வேண்டும்.போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பதால் கோவையில் விபத்து பலி எண்ணிக்கை குறைந்துள்ளது.குற்ற வழக்கிலிருந்து விடுதலையாகி வந்துள்ள பழைய குற்றவாளிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும்.கஞ்சா, குட்கா,போதை மாத்திரைகள் அறவே இல்லாத ஒழிக்கப்பட வேண்டும்.பள்ளி கல்லூரிகள் அருகே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.பொதுமக்களிடம் பெறப்படும் மணுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும்.ரவுடிகள் ஊடுருவி விடாதபடி தீவிரமாக கண்காணிக்க வேண்டும்..காலை ,மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இடங்களில் கூடுதலாக போலீசார் பணியமர்த்தப்பட வேண்டும்..வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழாவை யொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.இவர் அவர் பேசினார்.கூட்டத்தில் துணை போலீஸ் கமிஷனர்கள், உதவி போலீஸ் கமிஷனர்கள் இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர்.