அரசு பஸ் திடீர் ஜப்தி… இழப்பீட்டுத் தொகை வழங்காததால் நீதிபதி அதிரடி நடவடிக்கை..!

கோவை புது சித்தாபுதூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். பெயிண்டர் இவர் கடந்த 22- 3- 20 17 அன்று கோவையிலிருந்து அரசு பஸ்சின் பின் இருக்கையில் அமர்ந்து சத்தியமங்கலம் சென்று கொண்டிருந்தார். அன்னூர் அருகே சென்றபோது பஸ் டிரைவர் திடீர் பிரேக் போட்டார் .அப்போது பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்டு ஆறுமுகம் படுகாயம் அடைந்தார். இது குறித்து அவர் உரிய இழப்பீடு வழங்க கோரி கோவை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி கடந்த 20 20 ஆம் ஆண்டு ரூ15 லட்சத்தை போக்குவரத்து கழகம் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டார். ஆனால் அந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து நிறைவேற்ற கோரும் மனு ஆறுமுகம் சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகும் இழப்பீட்டுத் தொகை வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து நேற்று கோவையிலிருந்து வாளையார் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு டவுன்பஸ் (எண் 96) ஜப்தி செய்யப்பட்டது. இந்த பஸ் நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டது.