ஓடும் காரில் திடீர் தீ – அதிர்ஷ்டவசமாக 4 பேர் உயிர் தப்பினர்.!!

கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டியை சேர்ந்தவர் பாலகுமார். தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று மாலை தனது மனைவி, தாயார் மற்றும் குழந்தையுடன் பழனி கோவிலுக்கு காரில் புறப்பட்டார். காரை பாலகுமார் ஓட்டினார். மாலை 5:45 மணிக்கு கோவை – பொள்ளாச்சி சாலையில் ஏழுர் பிரிவு அருகே சென்ற போது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென்று கரும்புகை வந்தது. இதை பார்த்த பாலகுமார் உடனடியாக காரை நிறுத்திவிட்டு அனைவரையும் கீழே இறக்கினார். பின்னர் சிறிது நேரத்தில் காரின் முன்பகுதியில் தீப்பிடித்து எரிந்தது . இது குறித்து கிணத்துக்கடவு தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். காரின் முன் பகுதி எரிந்து சேதம் அடைந்தது.. காரை உடனடியாக நிறுத்தி அனைவரும் இறங்கியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.