கோவை :தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் முத்து குமார், தினேஷ், வீரமணி, சின்ன கருப்பு ,மனோஜ் பாண்டீஸ்வரன் அழகுராஜ் .இவர்கள் சூலூர் பக்கம் உள்ள முத்து கவுண்டன் புதூரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்து பெட்ரோல் டேங்கர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் நேற்று இரவு குடிபோதையில் இருந்தனர் . அப்போது ஒரு அறையில் ஸ்டவ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார்கள். அடுப்பின் அருகில் வைத்து 10 லிட்டர் பெட்ரோல் கேனில் இருந்து பாட்டிலுக்கு பெட்ரோலை ஊற்றினார்கள். அப்போது திடீரென்று தீப்பிடித்தது. இதில் அழகு ராஜ் ,முத்துக்குமார், சின்ன கருப்பு ,பாண்டீஸ்வரன் மனோஜ், வீரமணி தினேஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சின்ன கருப்பு, முத்துக்குமார், அழகு ராஜ் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். இந்த தீ விபத்தில் வீடு முழுவதும் எரிந்து நாசமானது.இது பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர. சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..
சூலூரில் நள்ளிரவில் வீட்டில் திடீர் தீ விபத்து – 3 பேர் உடல் கருகி பரிதாப பலி..
