கோவை அரசு மதுக்கடையை அகற்றக்கோரி திடீர் சாலை மறியல் – பெண்கள் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு..!

கோவை கணபதியில் இருந்து சங்கனூர் செல்லும் மெயின் ரோட்டில் குடியிருப்புகளுக்கு மத்தியில் டாஸ்மாக் கடை (எண் 1638 ) உள்ளது.அந்த மது கடையில் மது பிரியர்கள் மது குடித்துவிட்டு அடிக்கடி தகராறில் ஈடுபடுகிறார்கள். மேலும் குடிபோதையில் அலங்கோலமாக ரோட்டில் விழுந்து கிடக்கிறார்கள். இதனால் அந்த வழியாக செல்ல முடியாமல் பெண்கள் குழந்தைகள் அவதிப்படுகிறார்கள். -எனவே அந்த டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள்.இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் நேற்று டாஸ்மாக் மதுக்கடை அருகே சங்கனூர் மெயின் ரோட்டில் திரண்டனர். பின்னர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் உதவி கமிஷனர் பார்த்திபன், சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி, சப் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் உட்பட போல போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய அதிகாரியிடம் மனு அளித்து பிரச்சனைக்கு தீர்வு தீர்வு காண வேண்டும் சாலை மறியல் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தினர் அதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.இது தொடர்பாக சங்கனூர்ரோட்டை சேர்ந்த சஞ்சய் குமார் ( 35) வீர பெருமாள் ( 44 ) சரவணன் (57) சௌந்தரராஜன் ( 41 ) மோகன் ( 56) சரண்யா ( 30) சௌமியா (20) சலோமியா (36) நேத்ராவதி ( 38 ) சரஸ்வதி (41) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..