பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 5 சீனர்கள் உயிரிழந்தனர்.
தசு எனும் பகுதியில் சீன நாட்டினரின் கான்வே வாகனத்தின் மீது தற்கொலை படையினர் தாக்குதல் நடத்தினர்.
பாகிஸ்தானின் பல பகுதிகளில் நடைபெறும் கட்டுமானப் பணிகளில் சீன நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. சீன பொறியாளர்கள் சென்ற வாகனத்தின் மீது ஆயுதக்குவியலுடன் வந்த தற்கொலைப்படை தீவிரவாதி வெடிக்கச் செய்துள்ளார்.
இந்த நிலையில், இந்த தாக்குதலில் சீனாவைச் சேர்ந்த 5 பேர் உள்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர்.
அணை கட்டுமானத்திற்காக வாகனத்தில் சென்ற சீனப் பொறியாளர்களைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.