கோவை சூலூர் பக்கம் உள்ள நாகம்ம நாயக்கன்பாளையத்தில் அருள்மிகு .செல்வ விநாயகர் திருக்கோவில் உள்ளது .இங்கு நேற்று காலையில் கோவிலை திறந்து பார்த்தபோது உள்ளே இருந்த பித்தளை தட்டு, மணி, குத்து விளக்கு போன்ற பூஜை சாமான்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்துக் கோவில் நிர்வாகிகளும்,பொதுமக்களும் அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். அப்போது ஒரு நபர் தலையில் சாக்கு மூட்டையுடன் நடந்து செல்வதை பார்த்தனர். அவரை தடுத்து நிறுத்தி சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தார்கள். அதில் கோவிலில் கொள்ளடிக்கப்பட்ட பூஜை சாமான்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆசாமியை சூலூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர்.விசாரணையில் அவர் உடுமலை பக்கம் உள்ள மானுப்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் ( வயது 57) என்பது தெரியவந்தது.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.