தமிழ்நாடு அரசு சார்பாக ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிறந்த மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்படும்.தமிழகப் பேரூராட்சிகள், தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், சென்னை மாவட்டம் தவிர்த்த, 37 மாவட்டங்களில் 488 பேரூராட்சிகள் உள்ளது. தமிழகத்தின் சிறந்த மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற்று வந்தது. இதற்காக 13 கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டி இந்த தேர்வு நடைபெற்றுள்ளது. இதில் சூலூர் பேரூராட்சி சிறந்த பேரூராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டு 20 லட்சம் ரூபாய் பணம் மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டது தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இடமிருந்து பேரூராட்சித் தலைவர் தேவி மன்னவன் செயல் அலுவலர் சரவணன் பெற்றுக் கொண்டனர் தொடர்ந்து உள்ளாட்சி துறை அமைச்சர் கே. என். நேரு , சட்டப்பேரவை சபாநாயகர் மாண்புமிகு அப்பாவு அவரிடமும் வாழ்த்துக்களை பெற்றனர். இவர்களோடு சூலூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் மன்னவன் கண்ணம்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ்குமார், சூலூர் பேரூராட்சி தலைமை எழுத்தர் கோவிந்தராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்..