கோவை வடவள்ளி அருகில் உள்ள சோமையம்பாளையத்தை சேர்ந்தவர் தமிழரசன் ( வயது 30) டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். இவர் குடிப்பழக்கம் உடையவர். இவரது மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு வந்தார்.இதனால் இவருக்கும், மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த தமிழரசன் நேற்று அவரது வீட்டில் உள்ள ஒரு அறையை பூட்டிக் கொண்டு சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வடவள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது.சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் விசாரணை நடந்து வருகிறது.
மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு கணவன் தூக்கு போட்டு தற்கொலை..!
