கோவை: தஞ்சாவூர் மாவட்டம், திரிபுவனத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது, 41).சரவணம்பட்டி பக்கமுள்ள விசுவாசபுரத்தில், மனைவி, 3 குழந்தையுடன் வசிக்கிறார். இவரது மனைவி சத்துணவு மையத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.இவருடன் பணிபுரிந்த தொழிலாளியான ஜெகதீசன் (வயது 32), சில வாரங்களாக கார்த்திகேயன் வீட்டில் தங்கி வந்தார். அப்போது ஜெகதீசனுக்கும், தனது மனைவிக்கும் தொடர்பு இருப்பதாக கார்த்திகேயனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.இதனால் ஆத்திரமடைந்து குடிபோதையில் இரும்பு கம்பியால் ஜெகதீசனை அடித்துக் கொலை செய்தார். பின்னர் தப்பி ஓடி விட்டார்.இதுகுறித்து கோவில் பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார், காளப்பட்டியில் பதுங்கி இருந்த கார்த்திகேயனை கைது செய்தனர். இவரை கோவை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.