குறைந்த மார்க் வாங்கியதால் கோவை மாணவி தற்கொலை…

கோவை ராமநாதபுரம் புலியகுளம், ரெட் பீல்டு ரோட்டை சேர்ந்தவர் மாசான ராஜ், இவரது மகள் நவீன்யா (வயது 16) பீளமேட்டில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1 படித்து வந்தார்.இவர் நுழைவு தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார்.இதற்காக நடந்த மாதாந்திர தேர்வில் குறைந்த மதிப்பெண் வாங்கினார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த நவீன்யா நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் படுக்கைஅறையில் மின்விசிறியில் சுடிதார் துப்பட்டாவை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது தந்தை மாசானராஜ் ராமநாதபுரம் போலீஸ் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.