தடா பெரியசாமி பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.!!

பாஜகவில் பட்டியல் அணி மாநில தலைவராக இருந்த தடா பெரியசாமி, மக்களவை தேர்தலில் சீட் ஒதுக்காத காரணத்தால் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனை எதிர்த்து போட்டியிட திட்டமிட்டிருந்த அவர், தனக்கு அத்தொகுதி பாஜகவில் ஒதுக்கப்படும் என எதிர்பார்த்தார். ஆனால், அவருக்கு பதிலாக கார்த்திகாயினி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதில் கடும் அதிருப்தி அடைந்த தடா பெரியசாமி இன்று பாஜகவில் இருந்து விலகி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அண்ணாமலை மீதும் தடா பெரியசாமி கடும் அதிருப்தியில் இருக்கிறார்.