இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம்.
சமூக ஊடகங்களில் பல பறவைகள் மற்றும் விலங்குகளின் வீடியோக்கள் அவ்வப்போது பகிரப்படுகின்றன. இவற்றில் சில வீடியோக்கள் நம்மால் நம்ப முடியாத அளவுக்கு இருப்பதை மறுப்பதற்கில்லை. சில வீடியோக்களில் விலங்குகளும் பறவைகளும் நமக்கு பாடம் கற்பிப்பது உண்டு.
அப்படி ஒரு வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த பிறகு நமக்கும் நமது பொறுப்புகள் புரியத் துவங்கும். பூங்காவில் விழுந்த குப்பைகளை ஒரு காகம் தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டது என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? ஆனால், அது உண்மை. இந்த வீடியோ மூலம் உங்களுக்கு இதற்கான சான்றும் கிடைக்கும்.
வைரலாக பரவி புயலை கிளப்பி வரும் இந்த வீடியோவில் ஒரு பூங்காவில் மக்கள் கூட்டம் அலைமோதுவதை காண முடிகின்றது. காகம் வித்தியாசமான ஒரு விஷயத்தை செய்வதால் அனைவரும் காகத்தை வீடியோ எடுப்பதையும் வீடியோவில் காணலாம். காகம் பாட்டிலை வாயில் தூக்கி குப்பைத் தொட்டியில் போடுவதை வீடியோவில் தெளிவாக பார்க்கிறோம். காகங்கள் இப்படி செய்வது மிகவும் ஆச்சரியமான விஷயமாகும். இந்த வீடியோவைப் பார்த்த பின்னர், நீங்களும் இதுபோன்று சாலையிலோ அல்லது திறந்த வெளியிலோ குப்பைகளை வீசினால், இன்றிலிருந்தே உங்கள் பழக்கங்களை மேம்படுத்தி, உங்கள் பகுதிகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுவீர்கள் என்பதில் ஐயமில்லை.