சூலூரில் தமிழ்நாடு முதல்வரின் மக்கள் தொடர்பு முகாம்..!

கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் காங்கேயம் பாளையத்தில் தமிழ்நாடு முதல்வ ரின் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. மக்கள் தொடர்பு முகாமில் அரசு துறை சார்ந்த பொதுமக்களின் குறைகளுக்கு மனு கள் பெறப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் கிரந்தி குமார் பாடி நிகழ்வில் கலந்து கொண்டு மக்கள் தொடர்பு முகாமை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இதில் 1.80கோடி மதிப்பிலான வீட்டு மனை பட்டா தையல் இயந்திரம் விவசாய கிருமி நாசரேத் கிடைக்கும் இயந்திரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் , தென்னை நாற்றுக்கள், குடும்ப அட்டை மகளிர் சுய உதவிக் குழு மானிய நிதிகள் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கி பொது மக்களின் 250க்கும் மேற்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர், மக்கள் தொடர்பு முகாமில் பெறப்படக்கூடிய அனைத்து மனுக்கள் 28 நாட்களில் தீர்வு காணப்பட்டு வருகிறது. ஒரு மாதத்திற்குள் அதற்கான பதில் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த மாதிரி முகாமில் கிடைக்கும் அணுக்கள் 3000 க்கு மேல் பெறப்படுகிறது .அவை அனைத்தும் உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது தீர்வு காண்பதற்கான காலக்கெடு 27 நாட்களாக தற்போது குறைக்கப்பட்டுள்ளது பெறப்படும் மனுக்கள் மூன்று பிரிவுகளாக தரம் பிரிக்கப்பட்டு அதற்கான தீர்வுகள் காணப்பட்டு வருகிறது. தரம் பிரிக்கப்பட்ட மனுக்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது அதில் நிலுவையில் இருக்கக்கூடிய நான்கிலிருந்து மூன்று சதவீத மனுக்கள் மட்டுமே சி பிரிவுக்கு செல்கிறது அது எந்த துறையின் கீழ் வருகிறது என பார்த்து அதன் மூலம் தீர்வு காணப்பட்டு வருகிறது.மாவட்டத்தில் உள்ள அப்பகுதியில் வட்டாட்சியர் அழைத்து அவர்களிடம் இருந்து 15 நாட்களுக்குள் பெறப்பட்ட மனுக்களுக்கான நிலவரம் குறித்து கேட்டு பெறப்பட்டு வருகிறது. இந்த மக்கள் தொடர்பு முகாமல் பொதுமக்களுக்கு சிறந்த முறையில் தீர்வு காணப்பட்டு வருகிறது.
எண்ணெய் குழாய் பதிப்பு விவகாரத்தில் 1980 களில் குழாய் பதிப்பதற்கான அனுமதி மற்றும் அதற்கான அனுமதியை விவசாயிகள் கொடுத்துள்ளனர் . அதன் மூலம் தான் குழாய் ஆனது பதிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கோரிக்கைகள் விவசாயிகள் பலமுறை வைத்துள்ளனர். விவசாயிகள் கூறுவது போல மாற்றி அமைத்தால் மீண்டும் விவசாய நிலங்களை கையகப்படுத்தக்கூடிய நிலை ஏற்படும் இதனால் விவசாயிகள் மேலும் பாதிப்பு உள்ளவர்கள், அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் முறையிட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் அரசு அறிவிக்கும் முடிவின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கோவை மாவட்டத்திற்கு பில்லூர் அணையில் இருந்து குடிநீர் கொண்டுவரப்படு கிறது அணையின் நீர்மட்டம் நிறைந்து காணப்படுகிறது. ஆகவே இந்த வருடம் குடிநீர் பிரச்சினை இருக்காது. கோவையில் வங்க தேசத்தினர் ஊடுருவல் குறித்து கேட்டபோது அது பற்றிய தகவல் மாவட்ட நிர்வாகத்திற்கு இன்னும் வரவில்லை அவ்வாறு ஏதேனும் ஊடுருவல் குறித்து தகவல் வந்தால் காவல்துறை மூலம் அதற்கு உண்டான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்..