திருச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பினர் மாநகராட்சி ஆணையருடன் சந்திப்பு..!

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளா் வி. கோவிந்தராஜூலு தலைமையிலான வணிகா் சங்க நிா்வாகிகள் திருச்சி மாநகராட்சி ஆணையா் வே. சரவணனை சந்தித்து பேசினா். இது குறித்து வரிகள் சங்கங்களின் பெயர் அமைப்பினார் செய்தியாளர்களிடம் கூறும் போது
திருச்சி மாநகரின் முக்கியப் பகுதியான என்எஸ்பி சாலை, நந்தி கோவில் தெரு, தேரடி கடைவீதி, பெரிய கடை வீதி சின்ன கடைவீதி இங்கு பல ஆண்டுகளாக வர்த்தகர்கள் தொழில் செய்து வருகிறார்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வருமான வரி ஜிஎஸ்டி சொத்து வரி தண்ணீர் கட்டணும் குப்பை வரி தொழில் வரி போன்ற பல்வேறு வரிகளை வியாபாரிகள் செலுத்தி வருகிறார்கள் கடந்த ஆறு மாத காலமாக அந்த பகுதியில் உள்ள கடைகளுக்கு இரு சக்கர வாகனம் ஆட்டோ கார் போன்றவற்றில் மக்கள் வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது தரைக்கடை என்ற போர்வையில் அத்துமீறி கடைகளில் முன் சிறு வியாபாரிகள் கடைகளை போட்டிருப்பதால் அந்த நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்கள் வந்து செல்வது முடிவதில்லை மலைக்கோட்டைக்கு வெளிநாட்டிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து கொண்டிருக்கின்றனர் ஆனால் மலைக்கோட்டை தெப்பக்குளமே தெரியாத அளவுக்கு கடைகள் போட்டு மறைத்துள்ளனர் ஏற்கனவே ஆன்லைன் வர்த்தகத்தினால் தொழில்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இது போன்ற பிரச்சனைகளால் அந்த பகுதி வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் எனவே வருகிற தீபாவளி பண்டிகை காலத்தில் வணிகா்கள் பல்வேறு இடா்பாடுகளையும், பிரச்னைகளையும் ஒவ்வொரு ஆண்டும் சந்தித்து வருகின்றனா். மேற்கண்ட இடத்தில் சாலைகளை, சாலையோர வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதால், கடும் நெரிசல் நிலவுகிறது. வாகனங்களை கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் இச்சாலைகளில் கடைகள் வைத்திருக்கும் வணிகா்களின் வியாபாரம் பாதிக்கப்படுகிறது.
இச்சாலைகளில் உள்ள சாலையோர வியாபாரிகளின் ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றி, தீபாவளி பண்டிகை கால இடா்பாடுகளை களைய வேண்டும் எனத் தெரிவித்தனா். இதைக் கேட்ட மாநகராட்சி ஆணையா், ஒரு வார காலத்திற்கும் நல்ல முடிவு எடுக்கிறோம் என்று ஆணையர் கூறி இருக்கிறார் நாங்கள் சிறு வியாபாரிகளுக்கு எதிரானவர்கள் கிடையாது அவர்களும் தொழில் செய்யட்டும் அவர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கட்டும் மக்களுக்கோ வியாபாரிகளுக்கு போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் தொழில் செய்யப்பட்டோம் அவர்களுக்கும் நாங்கள் பாதுகாப்பு கொடுக்க தான் போகிறோம் என்றனர். இந்தச் சந்திப்பின்போது தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவா் தமிழ்செல்வம், மாவட்ட தலைவா் ஸ்ரீதா், மாநகர தலைவா் எஸ்.ஆா்.வி. கண்ணன், மங்கள் அண்ட் மங்கள் உரிமையாளா் மூக்கப் பிள்ளை, சாரதாஸ் Apartments ரோஷன், ஆனந்தா காா்ப்பரேஷன் ரமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.