தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி. இன்று கோவை வருகை.!!

கோவை: தமிழ்நாடு காவல்துறை சட்டம் – ஒழுங்கு டி.ஜி.பி.யாக பணிபுரிந்து வருபவர் சங்கர் ஜிவால். இவர் இன்று இரவு 7 மணிக்கு கோவை வருகிறார். நாளை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்துகிறார் . நாளை மறுதினம் (சனிகிழமை )காலை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் போலீசாரிடம் குறைகள் கேட்கிறார். இந்த கூட்டத்தில் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.செந்தில்குமார், போலீஸ் கமிஷனர்கள் பாலகிருஷ்ணன் (கோவை), லட்சுமி (திருப்பூர்) டி.ஐ.ஜிக்கள், எஸ்.பி.க்கள், துணை கமிஷனர்கள் பங்கேற்கிறார்கள்..