சென்னை: தமிழக காவல்துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி ரயில்வே போலீஸ் ஏடிஜிபி ஆக ஓய்வு பெற்றார். போலீஸ் துணை சூப்பிரண்ட் ஆக பணியை தூக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் போலீஸ் டிஐஜி மற்றும் ஐஜி திறம்பட பணியாற்றி தமிழக ரயில்வே காவல்துறையில் கூடுதல் இயக்குனராக பணியாற்றி நேற்று ஓய்வு பெற்றார். ரயில்வே காவல்துறையில் பணியாற்றியபோது குற்றச் சம்பவங்கள் நிகழாமல் பொதுமக்களின் பாராட்டுதலை பெற்றார். கஸ்தூரிபாய் வேலுச்சாமி என்பவர்களுக்கும் மகளாக பிற ந்து ஒழுக்கத்துடன் வளர்க்கப்பட்டார். தாயார் கஸ்தூரிபாய் மகள் வனிதாவிற்கு காவல்துறையில் எப்படி பணியாற்றி ட வேண்டும் ஏழை மக்களுக்கு எப்படி உதவிட வேண்டும் சட்டம் ஒழுங்கிற்கு எப்படி அடிபணிய வேண்டும் என்று சொல்லிவளர்த்தார். யாரையும் பழி வாங்க கூடாது. நல்லதே நினை. நல்லதே செய் என சொல்லி சொல்லி வளர்த்தார். தாயாரால்தான் உத்தம பெண்மணியாக அஞ்சாத சிங்கமாக வளர்ந்தார். மக்களை மனிதனாக நினைத்து பழகு என சொல்லிக் கொடுத்து வளர்த்தார்.இவரது தங்கை ஜெயஸ்ரீ ஐபிஎஸ் அதிகாரி ஆவார். சென்னையில் ஐஜி யாக பணியாற்றி வருகிறார். வனிதாவின் தம்பி சரவணன் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் ஐஏஎஸ் அதிகாரியான இவர் உள்துறை செயலாளராக பணியாற்றி வருகிறார்.வ னி தாவின் ஓய்வு பெற்ற நிகழ்ச்சிக்கு போலி ஸ் உயர் அதிகாரிகள் சந் தீப் ராய் ரத்தூர் மற்றும் வன்னிய பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு வனிதாவின் பெருமைகளை எடுத்துக் கூறினர்
தமிழக ரயில்வே காவல்துறை கூடுதல் இயக்குனர் வனிதா ஓய்வு பெற்றார்..!
