தமிழ் புலிகள் கட்சி தலைவர் கைது..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த 2019 -ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக துணிக்கடை உரிமையாளர் வீட்டின் தடுப்புச் சுவர் இடிந்து 5 வீடுகள் மீது விழுந்தது . இதில் 17 பேர் உயிரிழந்தனர். அவர்களுக்கு தமிழ் புலிகள் கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் மற்றும் நிர்வாகிகள் நேற்று காலையில் கோவையில் இருந்து அங்கு புறப்பட தயாரானார்கள். உடனே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டுப்பாளையம் போலீசார் கோவைக்கு வந்து நாகை திருவள்ளுவனை கைது செய்தனர். அவருடன் சேர்ந்து 10 க்கு மேற்பட்ட  நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர். மாலையில் இவர்கள் விடுவிக்கப்பட்டனர்..