தஞ்சாவூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் ஹரித்திரா விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள ஹரித்ரா விநாயகரை உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய மாமன்னர் ராஜராஜசோழன் பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பியதாக வரலாறு கூறுகிறது. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்து முடிந்தன.
காலை 9 மணிக்கு மேல்10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூலவர் அபிஷேகம் மற்றும் அனைத்து பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. பூர்வாங்க பூஜைகள் பின்னர் யாகசாலை பூஜை இரவு மகாதீபாராதனை, இரண்டாம் கால பூஜை, விஷேச சந்தியா, அனுஷ்டானம், தேவார மங்கள இசை ஆரம்பம், விக்னேஸ்வர பூஜை நடைபெற்றன.
மாலையில் மூன்றாம் கால பூஜை , விஷேச சந்தியா, அனுஷ்டானம் நான்காம் கால பூஜை அதை தொடர்ந்து விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாஜனம்,
யாக பூஜைக்கு பின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூலவர் ஹரித்ரா விநாயகருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பிள்ளையார்பட்டி கிராமவாசிகள் செய்திருந்தனர்.பிள்ளையார்ப்பட் டி ஊராட்சி மன்றத் தலைவர் அ.உதயகுமார், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ஜெயந்தி சதானந்தம், ஒன்றிய குழு உறுப்பினர் செளமியா ஜனார்த்தனன். தஞ்சை மேற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி மண்டல தலைவர் மிலிட்டரி காமராஜ் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கோயில் விழா கமிட்டியார், கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் சுற்று கிராம மக்கள் பலர் கலந்துக்கொண்டனர்..