இனி 24 மணி நேரமும் டீ கடைகள் இயங்கலாம்..!

மிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வசித்து வரும் பஷீர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் நான் டீக்கடை வைத்து நடத்தி வருகிறேன். போலீசார் இரவு 11 மணிக்குள் டீக்கடையை மூட வேண்டும் என வற்புறுத்துகின்றனர். எனவே அதற்குப் பிறகும் டீக்கடையை தொடர்ந்து நடத்த அனுமதி வேண்டும் என வலியுறுத்தி அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் 24 மணி நேரமும் டீக்கடைகள் செயல்படலாம் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது 11 மணிக்குள் டீக்கடையை மூட வேண்டும் என வற்புறுத்துவது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

அத்துடன் போலீசார் இரவு 11:00 மணிக்கு டீக்கடையை மூட வேண்டும் என நிர்பந்திப்பது ஏற்புடையது அல்ல என கூறியுள்ளனர். மேலும் டீக்கடையை தொடர்ந்து 24 மணி நேரம் நடத்தலாம் என்ற அரசாணை இருப்பதால் அதன்படி நடத்தலாம் எனக் கூறியுள்ளனர்.