பாலியல் துன்புறுத்தலால் கோவை மாணவி தற்கொலை செய்த வழக்கில் ஆசிரியர் மிதுனின் மனைவியும் கைது..!

கோவை ஆர். எஸ். புரத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 17 வயது சிறுமி பிளஸ் 2 படித்து வந்தார். அந்த பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணிபுரியும் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார் .இதை சக மாணவிகளிடம் கூறி மாணவி கதறி அழுதுள்ளார் .இந்த விவகாரம் வெளியே தெரியக்கூடாது என ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மிரட்டியனார்.. இதை தொடர்ந்து மாணவி பள்ளியில் இருந்து மாற்று சான்றிதழ் பெற்று வெளியேறினார். பின்னர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் சேர்ந்தார். ஆனால் அந்த ஆசிரியர் செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு மாணவியை மிரட்டியுள்ளார். மேலும் வாட்ஸ் அப் குறுஞ்செய்தி மூலம் தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான  மாணவி கடந்த 20 21 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் தேதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இந்த சம்பவம் கோவையில் பரபரப்பு ஏற்படுத்தியது. இது குறித்து ஆர். எஸ். புரம் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி உட்பட 3 பேரை சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மாணவிக்கு சிறுவயது முதல் பாலியல் தொல்லை கொடுத்ததாக 70 வயது முதியவரும் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.போக்சோ சட்டப்பிரிவில் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர் .இந்த நிலையில் மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தனியார் பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியின் மனைவி அர்ச்சனா ( (வயது 32) என்பவரும் நேற்று கைது செய்யப்பட்டார். இவர் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.. மாணவி பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக முறையிட்ட பின்பும் உரிய தகவலை காவல்துறைக்கு தெரிவிக்காமல் இருந்ததற்காகவும், தற்கொலைக்கு தூண்டியதாகவும் அர்ச்சனா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..