பட்டப் பகலில் ஆசிரியையிடம் தாலி செயின் பறிப்பு – பைக் ஆசாமி கைவரிசை.

கோவை ஏப்26 கோவை சுந்தராபுரம், எம்.ஜி.ஆர் .நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம், இவரது மனைவி காயத்ரி (வயது 36)இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலையில் இவர் சுந்தராபுரம் சி.டி.ஓ. காலனியில் நடந்து சென்றார். அப்போது கருப்பு -சிவப்பு நிற பைக்கில் வந்த ஒரு மர்ம ஆசாமி இவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி செயினை பறித்துவிட்டு தப்பிச் சென்று விட்டார். இது குறித்து காயத்திரி சுந்தராபுரம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு பைக்கில் தப்பிய மர்ம ஆசாமியை தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.