கோவை தடாகம் ரோட்டில் உள்ள கோவில் மேடு டாஸ்மாக் கடை அருகே சிலர் போதை மாத்திரைகளை பொடியாக்கி விற்பனை செய்வதாக சாய்பாபா காலனி போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்படி இன்ஸ்பெக்டர் ரெஜினா தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.அப்போது போதை மாத்திரைகளை பொடியாக்கி விற்ற ஒரு வாலிபரை கைது செய்தனர்.,விசாரணை அவர் இடையர்பாளையம் பாரிநகரை சேர்ந்த சரவணகுமார் (வயது 28) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 250 கிராம் போதை மாத்திரை பொடி பறிமுதல் செய்யப்பட்டது.விசாரணையில் இவர் உணவு பொருள் சப்ளை செய்யும் வேலை செய்து கொண்டே போதை மாத்திரை பொடியை அந்த பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கும் வட மாநில இளைஞர்களுக்கும் விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரிடமிருந்து 250 கிராம் போதை மாத்திரை பொடி கைப்பற்றப்பட்டது. அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.