கோவை சரவணம்பட்டி, சிவானந்தபுரம், 3 -வது வீதியை சேர்ந்தவர் தங்கராஜ் .இவரது மனைவி சிந்து (வயது 24) இவர் அவரது வீட்டில் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போதுஅவரது பின் வீட்டில் வசிக்கும் ஒரு வாலிபர் சிந்து குளிப்பதை ஜன்னல் வழியாக செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதை பார்த்த சிந்து சத்தம் போட்டார் . அதற்குள் அந்த ஆசாமி தப்பி ஓடி விட்டார் .இது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து ராமநாதபுரம் மாவட்டம், கலையனூரை சேர்ந்த முத்துசாமி மகன் பாலமுருகன் ( வயது 21) என்பவரை நேற்று மாலை கைது செய்தார் . இவர்.தற்போது சரவணம்பட்டியில் வசித்து வருகிறார். இவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..
இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர் கைது..!
