சென்னை டி .நகர், பகவந்தம் வீதியைச் சேர்ந்தவர் சத்யநாராயணன். இவரது மகன் சுஜய் ( வயது 25) இவர் கோவையில் நடந்த ஒரு திருமண விழாவில் பங்கேற்க நண்பர்களுடன் நேற்று கோவைக்கு வந்தார் . கோவை ராமநகர்,சிவசாமி ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தார் .நேற்று அவரது தங்கியிருந்த 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்தார்.இதில் பலத்த காயம் ஏற்பட்டது .அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் பரிதாபமாக இறந்தார் .இது குறித்து காட்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் வேடப்பட்டியைச் சேர்ந்த சுந்தரம் என்பவர் தனது நண்பரின் மகன் திருமண நிகழ்ச்சிக்காக அந்த ஓட்டலில் 33 அறைகளை ” புக்கிங்” செய்திருந்தார். அந்த அறைகளில் தங்கி இருந்த சுஜய் மாடியிலிருந்து விழுந்து இறந்தார். இவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறி விழுந்தாரா?என்பது தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
ஓட்டல் 3-வது மாடியில் இருந்து விழுந்து வாலிபர் பலி..
