கஞ்சநாயக்கன்பட்டியில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் தற்போது திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடந்து வருகிறது.
திருவிழா என்பதால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் பட்டாசு வைத்து வானவேடிக்கை காட்டுவதற்கு ஏற்பாடு செய்துள்ளனா். இதற்காக அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று பட்டாசுகளை வாங்கி வந்துள்ளனா்.
இந்த நிலையில் அவர்கள் பட்டாசுகளை எடுத்து வரும் சமயத்தில் திடீரென பட்டாசு வெடித்து சிதறி உள்ளது. இதனால் அந்த இடத்தில் தீப்பொறி பறக்க, வெடி சத்தம் கேட்டுள்ளனா். இதில் பட்டாசு எடுத்து வந்தவர்கள் பலத்த தீக்காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே அவர்கள் கத்தி கூச்சலிட்டதாக தெரிகிறது. மேலும் அவர்கள் சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளனா். இந்த சம்பவம் குறித்து உடனடியாக கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனா். அந்த தகவலின்பேரில் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனா்.
அவர்கள் வெடி விபத்து ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டனா். அப்போது வெடி விபத்தில், 3 பேரும் உடல் சிதறி பலியானது தெரிந்தது. இதையடுத்து சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். பட்டாசு வெடித்து திருவிழா சமயத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.
இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சுவாமி திருக்கல்யாணத்திற்காக பூசாரிப்பட்டி பகுதியில் இருந்து திருமண சீர்வரிசை எடுத்து சென்ற போது பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டதும், அதில் 3 பேர் பலியானதும் தெரிந்தது.