கோவை ஓட்டலில் பயங்கர தீ விபத்து. ரூ 25 லட்சம் பொருட்கள் சேதம்..! கோவை கவுண்டம்பாளையம் அம்புரோஸ் வீதியை சேர்ந்தவர் டேவிட் என் கில்பட்(வயது 49)இவர் சிவானந்தா காலனி டாடாபாத் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக”கொக்கரக்கோ”என்ற பெயரில் ஒட்டல் நடத்தி வருகிறார்..நேற்று முன்தினம் இரவில் இவர் ஒட்டலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இரவில் அங்கிருந்து புகை வந்தது இதை பார்த்த காவலாளி அதன் உரிமையாளருக்கு தகவல் கொடுத்தார் .இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதற்குள் தீமளமளவென பரவியது.இதில் ஏராளமான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது.சேதமதிப்பு ரூ 25 லட்சம் இருக்கும்.தீயணைப்பு படையினர்விரைந்து வந்து தீயை அணைத்தனர்..மின் கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த அதன் உரிமையாளர் டேவிட் என்கில்பட் ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை ஓட்டலில் பயங்கர தீ விபத்து – ரூ . 25 லட்சம் பொருட்கள் சேதம்..!
