காஞ்சிபுரத்தில் பயங்கரம்… கோஷ்டி மோதலில் ஒருவர் வெட்டி கொலை..!

காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் மயான கொள்ளை திருவிழாவின் போது பிரேம்குமார் என்பவருக்கும் உதயகுமார் பாரிவேந்தன் தரப்புக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பிரேம்குமாரின் தந்தை ராஜாராம் பாலு செட்டி சத்திரம் காவல் நிலையத்தில்

கொடுத்த புகாரின் பேரில் உதயநிதி பாரி வேந்தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது . இதன் காரணமாக இரு தரப்புக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்த நிலையில் சம்பவம் நடந்த அந்த இரவு 8.30 மணி அளவில் இறந்த உதயநிதி அவரது நண்பர்களான கிரி மற்றும் கௌதம் ஆகியோருடன் அவரது வீட்டின் அருகே மது அருந்தும் போது பிரேம்குமார் தனது டூவீலரில் அதிக சத்தத்துடன் அப்பகுதியில் சுற்றி வந்ததால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் இறந்த உதயநிதி அவரது நண்பர்களுடன் பிரேம்குமாரின் வீட்டுக்கு சென்று பிரேம்குமாரின் செய்கை சரி இல்லை என எச்சரித்து விட்டு சென்றுள்ளனர் . இதனால் ஆத்திரமடைந்த பிரேம் குமார் அவரது நண்பர்களான1. சஞ்சய்2.சாரதி 3.கிஷோர்4. கோபிநாத் 5. தட்சிணாமூர்த்தி ஆகியோருடன் காஞ்சிபுரம் தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட படு நெல்லி கிராமத்தில் உள்ள அம்மா கோவில் அருகில் உறங்கிக் கொண்டிருந்த கிரியை அடித்து விட்டு பின்னர் உதயநிதியின் வீட்டுக்கு சென்று உதயநிதி தலை மற்றும் கழுத்தை வெட்டி கொலை செய்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் உள்ளனர். வழக்கு தீவிர விசாரணையில் உள்ளது..