கோவையில் பயங்கரம்: கழுத்தை நெரித்து கணவர் படுகொலை-மனைவி, கள்ளக்காதலன் கைது..!

கோவை வடவள்ளி பக்கம் உள்ளசோமையம்பாளையம் ,காளப் பநாயக்கன்பாளையம் பிரிவை சேர்ந்தவர் விஜயகுமார். இவரதுமகன் பிரபு ( வயது 40 )லேத் ஒர்க் ஷாப் தொழிலாளி.இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு லாவண்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் பிரபு கடந்த ஒரு வாரமாக உடல்நல குறைவால் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பிறகு வீடு திரும்பினார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரபு வீட்டில் பிணமாக கிடந்தார். அவரது கழுத்தில் காயம் இருந்தது .இதுகுறித்து அவரது தாயார் கலாவதி வடவள்ளி போலீசில் புகார் செய்தார்.புகாரில் தனது மகனின்சாவில் மர்மம் இருப்பதாக கூறியுள்ளார். இன்ஸ்பெக்டர் பிராங்க்ளின் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றிபிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது தொடர்பாக முதலில்மர்ம சாவு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.விசாரணையில் பிரபு கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.இதைய டுத்துஇந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. தீவிரவிசாரணையில் இந்த கொலையை செய்தது பிரபுவின் மனைவி லாவண்யா (வயது 33, )அவரது கள்ளக்காதலன்பைரே கவுடா (வயது 39)என்பது தெரிய வந்தது.லாவண்யா தள்ளுவண்டியில் டிபன் ஸ்டால்நடத்தி வந்ததாகவும், பைரா கவுடா, எல் .அன்.டி நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததாகவும், அப்போது டிபன் சாப்பிட செல்லும்போது இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது.விசாரணையில் தெரியவந்தது.கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை தீர்த்து கட்டுவதற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உணவில் விஷம் கலந்து கொடுத்தனர்.மருத்துவமனையில் சிகிச்சைக்கு பிறகு அவர் உயிர் பிழைத்தார். இதனால் அவரை கொலை செய்வதற்காக வீட்டில் படுத்திருந்த பிரபுவையாரும் இல்லாத நேரம் காதலன் பைரா கவுடா துண்டால் கழுத்தை இறுக்க,மனைவி லாவண்யா தலையணையால் முகத்தை அமுக்கி படு கொலை செய்தது தெரியவந்தது.இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் பிராங்க்ளின் விசாரணை நடத்தி பிரபுவின்மனைவி லாவண்யா (வயது 33),அவளது கள்ளக்காதலனானகர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பைரே கவுடா (வயது 39) ஆகியோரை இன்று கைது செய்தார்.இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.இந்தக் கொலை வழக்கில் திறமையாக துப்பு துலக்கி கொலையாளிகளை கைது செய்த உதவி கமிஷனர் ரவிக்குமார், இன்ஸ்பெக்டர் பிராங்கிளின்,சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் தனிப்படையினரை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பாராட்டினார்.