கோவை : மதுரை ஆராப்பாளையத்தைச் சேர்ந்தவர் சத்திய பாண்டி (வயது 32) இவர் நேற்று முன்தினம் இரவு பாப்பநாயக்கன்பாளையம் கருப்பாக்காள்தோட்டம் பகுதியில் உள்ள இளநீர் கடையில் இளநீர் குடித்துவிட்டு அங்கிருந்தவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5பேர் கண் இமைக்கும் நேரத்தில் சத்திய பாண்டியை அரிவாளால் சர்மாக வெட்டினார்கள். துப்பாக்கியாலும் சுட்டனர். இதில் சத்தியபாண்டி அதே இடத்தில் உயிரிழந்தார் . அவரது உடலில் அரிவாள் வெட்டுக்களும், துப்பாக்கி குண்டு துளைத்த காயங்களும் இருந்தது.இவர் கோவை விளாங்குறிச்சியில தங்கி இருந்து அங்குள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து . இவர் மீது கோவையில் இந்து முன்னணி பிரமுகர் பிஜூவைகொலை செய்த வழக்கு உள்ளது .இதை போல மதுரையிலும் ஏராளமான குற்ற வழக்குகள் உள்ளன.இவர் ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.இதே போல கோவைஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே உள்ள கோபாலபுரத்தில் நேற்று மதியம் நீதிமன்றத்தில் கையெழுத்து போட்டு விட்டு திரும்பிய ரவுடி ஒருவர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார் கோவையை அடுத்த கோவில் பாளையம் பக்கம் உள்ளகொண்டையம் பாளையம், லட்சுமி நகரை சேர்ந்தவர் கோபால். இவரது மகன்கோகுல் என்ற சொண்டி கோகுல் ( வயது 25) பிரபல ரவுடி ‘இவர் மீது துடியலூர், சரவணம்பட்டி, கோவில்பாளையம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை . உட்பட 20-க்கு மேற்பட்ட வழக்குகள் உள்ளன .கடந்த 20 21 ஆம் ஆண்டு நடந்த கண்ணப்பன் நகரைச் சேர்ந்த குரங்கு ஸ்ரீராம் என்பவரது கொலை தொடர்பாக கோகுல் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சென்னை கோர்ட்டில் சரணடைந்தனர். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் .இதற்கு இடையில் கோகுல் ஜாமினில் வெளியே வந்தார் .குரங்கு ஸ்ரீராம் கொலை வழக்கு விசாரணை கோவைகோவை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் (எண் 3) நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கோகுல் கடந்த சில நாட்களாக வழக்கில் ஆஜராகாமல் இருந்து வந்தார்.இந்த நிலையில் அவருக்கு நீதிமன்றத்தில் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது .இதை யடுத்து கடந்த வாரம் கோர்ட்டில் கோகுல் ஆஜர் ஆனார் .இந்த நிலையில் நேற்றுசிவானந்தபுரம் மணி நகரை சேர்ந்ததனது நண்பரான மனோஜ் ஜோசுவா (வயது 22)என்பவருடன் நேற்று காலையில் கோர்ட்டுக்கு வந்தார் பின்னர் அவர் தனது வக்கீலுடன் உள்ளே சென்று கையெழுத்து போட்டு விட்டு வெளியே வந்தார் .தொடர்ந்து கோகுல். மனோஜ் ஆகியோர் கோர்ட்டுக்கு பின்புறம் கோபாலபுரம் 2 -வது வீதியில உள்ள பேக்கிரிக்கு காலை 11 மணி அளவில் டீ குடிக்க சென்றனர். அப்போது அவர்களை 5 பேர் கொண்ட கும்பல் பின் தொடர்ந்து வந்தனர். நீதிமன்றத்திற்கு வந்தவர்களாக இருப்பார்கள் என்று நினைத்து கோகுலும்,|மனோஜும் டீக்கடைக்கு நடந்து சென்றனர். கடை அருகே பேசிக்கொண்டிருந்த போது அவர்களை பின்தொடர்ந்து வந்த 5பேரும் கோகுலின் அருகே வந்தனர். கண் இமைக்க நேரத்தில் அந்த கும்பல் கோடுலை சுற்றிவளைத்து கத்தி அரிவாள் போன்ற ஆயுதங்களால் சரமாரியாக வெடினார்கள். கோகுலும்,அவரது நண்பரும் அந்த கும்பலின் பிடியிலிருந்து தப்பி ஓடினார்கள் . இருப்பினும் அந்த கும்பல் நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டியது. இதில் அவரது கழுத்தில் பலத்த வெட்டு விழுந்தது. உடனே மனோஜ் அவர்களிடமிருந்து கோகுலை காப்பாற்ற முயன்றார் .ஆனாலும் அந்த கும்பல், மனோஜையும் வெட்டினர் .இதில் தலை மற்றும் கால்களில் வெட்டப்பட்ட மனோஜ் மேற்கொண்டு ஓட முடியாமல் கீழே விழுந்து துடித்துக் கொண்டிருந்தார். இதற்கிடையில் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த கோகுல்சம்பவ இடத்தில் உயிரிழந்தார் தாங்கள் வந்த நோக்கத்தை நிறைவேற்றிய கொலைக் கும்பல் எந்த சம்பவம் நடைபெறாது போல நிதானமாக நடந்து சென்றனர். பின்னர் அந்த கும்பல் தாங்கள் வந்த வாகனத்தில் ஏறி தப்பி சென்றனர். பட்டப்பகலில் பொதுமக்கள்,வக்கீல்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்த படுகொலை நடந்ததுபெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இதை பார்த்த சிலர் அந்த பகுதியை தலை தெரிக்க ஓடினார்கள்..கொலை நடந்த இடத்தின் அருகில் நின்று கொண்டிருந்த ஒரு நாய் மட்டும் பைக்கில் தப்பி சென்ற கொலையாளியை துரத்தி சென்றது. சினிமா படப்பிடிப்பு போல நடந்த இந்த காட்சியை சிலர் ஓரமாக ஒதுங்கி நின்றபடி தங்கள் செல்போனில் பணம் பிடித்தனர்.கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொல்லப்பட்ட ரவுடி குரங்கு ஸ்ரீராமின் கொலைக்குபழிக்குபழியாக தீர்க்க இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இதில் குரங்கு ஸ்ரீ ராமன் கூட்டாளிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்திக்கிறார்கள். இதை தொடர்ந்து குரங்கு ஸ்ரீ ராமின் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.பட்டப் பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.இதே போல நேற்று மேலும் ஒரு கொலை நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு :- உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ரகுராம், இவரது மகன் பில்ட்டுராம் ( வயது 39) இவர் கோவை விளாங்குறிச்சி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று பில்ட்டு ராம் சரவணம்பட்டி விளாங்குறிச்சி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார் .டாஸ்மாக் கடைக்கி மது அருந்த வரும் நபர் ஒருவர் அங்கு வருபவரிடம் பணத்தை பறித்து தகராறில் ஈடுபடுவது வழக்கம். இதேபோல் அந்த நபர் நேற்று மது குடிக்க வந்த பில்ட்ராமிடம் பணம் தருமாறு கேட்டதோடு அவரிடம் இருந்த பணத்தை பறிக்க முயன்றார். அப்போது பில்ட்ராம் தடுத்துள்ளார் .பின்னர் டாஸ்மாக் கடை முன் இரண்டு பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் பில்ட்ராமை அடித்து கீழே தள்ளிவிட்டார். இதில் தலையின் பின்பகுதியில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பில்ட்ராம் உயிரிழந்தார் .மேலும் அந்த நபர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். .மது குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்தவர்சரவணம்பட்டி விநாயகபுரம் 2 -வது வீதியை சேர்ந்தகார்த்திக் மகன் சூர்யா (வயது 24) என்பது தெரியவந்தது . .இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துசூர்யாவை நேற்றிரவு கைது செய்தனர். கோவையில் அடுத்தடுத்து 2 நாட்களில் 3 சங்கிலி தொடர் கொலை சம்பவம் கோவை மக்களிடையே பெரும் பதற்றத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது..