ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்.கோவையில் 1,000 போலீசார் பாதுகாப்பு.

கோவை ஏப் 23 ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து கோவை மாநகர காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளது.கோவை மாநகரில் நேற்று இரவு முதல் சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் .மேலும் மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் தலைமையில் 4 துணை கமிஷனர்கள், அனைத்து உதவி கமிஷனர்கள்மற்றும் இன்ஸ்பெக்டர்கள்,சப் இன்ஸ்பெக்டர்கள் ரோந்து பணியை தொடங்கியுள்ளனர்.இது தவிர கோவில்கள், வழிபாட்டு தலங்களிலும் ,பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மாநகர காவல் துறை வழக்கமான இரவு ரோந்து மற்றும் வாகன சோதனைகளுக்கு 300 போலீசாரை நியமித்துள்ளது.மாநகரில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் விடிய விடிய போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்..