இந்திய அளவில் நடத்தப்பட்ட தூய்மை நகரங்களுக்கான போட்டியில் திருவேற்காடு நகராட்சி மாநில அளவில் 8- வது இடத்தையும் தென்னிந்திய அளவில் 25- வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளது 2023ஆம் ஆண்டுக்கான ஸ்வட்ச் சர்வேக் சான் எனப்படும் தூய்மை நகரங்களுக்கான போட்டி சமீபத்தில் நடத்தியது இதில் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சி தமிழகத்தில் முதலிடத்தை பெற்றுள்ளது திறந்தவெளி கழிப்பிட மற்ற நகராட்சியின் தரக் குறியீடு தரச் சான்றிதழையும் பெற்றுள்ளது 2023ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டில் உள்ள16 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் பெற்றுள்ளன எட்டாவது இடத்தை பெற்றதற்கான வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் நகர மன்ற தலைவர் மூர்த்தி நகராட்சி சுகாதார அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ் மற்றும் பொது து சுகாதார பிரிவு அலுவலர்களுக்கும் தெரிவித்தார் தலைவர் மூர்த்தி கூறுகையில் முதல் இடத்தை திருவேற்காடு நகராட்சி பெற்றிடும் சவால் விட்டு உறுதி கூறுகிறேன் இதற்கான முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் நான் வணங்கும் தெய்வம் தமிழகத்தின் நிரந்தர முதல்வர் மு க ஸ்டாலின் இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சர் இந்திய மாநிலமே வியக்கும் சின்னவர் உதயநிதி ஸ்டாலினின் அன்பு ஆசியும் எங்கள் நகராட்சிக்கு உண்டு என பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்…
தூய்மை நகரங்களுக்கான போட்டியில் திருவேற்காடு நகராட்சி 8- வது இடத்தை பிடித்து சாதனை….
