கோவை உக்கடம், வின்சென்ட் ரோடு சேர்ந்தவர் அனீஸ் ரகுமான் .இவரது மனைவி சகானா (வயது 27)இவரிடம்அதே பகுதியை சேர்ந்த அகமத் அகில் ( வயது 24) நட்பு வைத்திருந்தார்.இந்த நிலையில்அந்தப் பெண்ணிடம் செல்போன் மூலம் பண்ம் கேட்டு மிரட்டினார்.பணம் கொடுக்கவில்லை என்றால் கணவரையும், குழந்தைகளையும் கொன்று விடுவதாக மிரட்டினாராம் .இதை யடுத்து பயந்து சகானா அந்த வாலிபருக்கு பல தவணைகளாக ரூ 5 லட்சத்து 80 ஆயிரம் வரை கொடுத்துள்ளார்.இதுகுறித்து சகானா உக்கடம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் வழக்கு பதிவு செய்து அகமத் அகிலை நேற்று கைது செய்தார் .இவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உட்பட 5 பிரிவுகளில்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்து பணம் பறித்த வாலிபர் கைது …
